காமெடி பண்ண நான் என்ன காமெடியனா? மணியிடம் ஆக்ரோஷமாக மோதும் போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மற்றும் ’அடை தேனடை’ ஆகிய இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மணிகண்டன், அமுதவாணன், விக்ரமன், அசீம், தனலட்சுமி ஆகியோர் முரட்டுத்தனமாக விளையாடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் உள்ள இருந்து வரும் பொருளை எடுக்க அனைத்து போட்டியாளர்களும் முண்டியடிக்கும்போது அமுதவாணன் கையில் அந்த பொருள் சிக்கியது. ஆனால் அந்த பொருளை பிடுங்குவதற்காக மணிகண்டன் அவரிடம் கடுமையாக மோதுகிறார். இருப்பினும் அந்த மோதலை பொருட்படுத்தாமல் அமுதவாணன் அந்த பொருளை தன்வசம் கையகப்படுத்துகிறார். 

அதன்பின் அமுதவாணன் - மணிகண்டன் இடையே சண்டை ஆரம்பிக்கின்றது. ‘நீ என்னை அடித்தாய் மணி என்று அமுதவாணன் கூற மகேஸ்வரியும் அவருக்கு ஆதரவாக ’நீ கொஞ்சம் கடினமாகத்தான் விளையாடுகிறாய்’ என்று கூறினார். ஆனால் மணிகண்டன் அதை மறுக்கிறார். நான் சத்தியமாக உங்களை அடிக்கவே இல்லை என்று கூறுகிறார். மேலும் நீ என்மீ து வேண்டுமென்றே பழி போடுகிறாய் என்று கூற அதற்கு அமுதவாணன், ‘உன் மேல் நான் பழி போட வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார். இந்த காரணமாக பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

More News

கையை எடுங்க ரக்சிதா, வெட்கமா இருக்கு.. ராம்

கடந்த ஒரு மாதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய்சேதுபதி- பொன்ராம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்

விக்ரமன் - அமுதவாணன் சண்டை: இந்த வாரத்தின் குறும்படம் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது என்பது தெரிந்ததே. 

11 மொழிகளில் வெளியாகும் 'தி காஷ்மிர் ஃபைல்ஸ்' இயக்குனரின் அடுத்த படம். மீண்டும் உண்மைக்கதை?

'தி காஷ்மிர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் தமிழ் உள்பட 11 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரிலீசுக்கு முந்தைய நாளில் வெளியான 'யசோதா' படத்தின் வீடியோ: செம த்ரில்லிங் போல...

 நடிகை சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் த்ரில்லிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.