உங்க வீட்ல இருந்து வந்தவங்க ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க.. மனமுடைந்து பேசிய போட்டியாளர்.!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் கலகலப்பாக இருந்தது என்பதும் ஒரு சில போட்டியாளர்களின் உறவினர்கள் மட்டும் சில பிரச்சனைகளை எழுப்பினார்கள் என்பதை பார்த்தோம்.
குறிப்பாக ரவீனாவின் உறவினர்கள் வந்தபோது மணிக்கு தர்ம சங்கடமாக இருந்தது என்பதும் அவர்கள் பேசிய வார்த்தை மணியை வருத்தமடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரவீனாவிடம் இது குறித்து மணி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். ’ உங்க வீட்ல இருந்து வந்த இரண்டு பேருமே என்னை அசிங்கப்படுத்திட்டாங்க, எனக்கு தெரியும், இது தப்பா போகும்ன்னு தெரியும். ஒருவேளை உங்க அம்மா வந்து இருந்தால் இதையெல்லாம் சொல்லியிருப்பார்களா? என்று தெரியவில்லை என்று மணி கூற அதற்கு ரவீனா ’எங்க அம்மா வந்து இருந்தாலும் எங்க வீட்டில் அப்படித்தான் சொல்லி இருப்பாங்க’ என்று கூறுகிறார்.
’ரவினான்னு நாங்க பேர் வச்சிருக்கோம் என்று சொன்னது நான் உன்னை குண்டு பையா என்று சொன்னதுக்கா? என்று மணி கேட்க, ‘ஆமாம், அதுதான் அவங்களுக்கு காண்டு’ என்றும் ரவீனா கூறினார்.
"என்னடா இதெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க என்று எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது என்று மணி ரவீனாவிடம் வருத்தமடைய, வழக்கம் போல் ரவீனா சிரித்துக்கொண்டே ஜாலியாக கேட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout