பாகுபலிக்காக முயற்சிக்கும் மணிரத்னம்

  • IndiaGlitz, [Friday,November 08 2019]

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது. இந்த இரண்டு படங்களின் வசூலை நெருங்க இதற்குப் பின்னால் வந்த எந்த இந்திய படங்களாலும் முடியவில்லை

பாகுபலி படம் தயாரிக்கப்பட்டு வந்தபோது அதே பாணியில் தயாரிக்கப்படுவதாக விஜய்யின் புலி படம் குறித்த செய்திகள் வந்தன. ஆனால் புலி’ படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அதேபோல் ’பாகுபலி 2’ மற்றும் ஷங்கரின் 2.0 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் வசூலில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ’பாகுபலி 2’ படத்தின் வசூலை ’2.0’ படத்தின் வசூல் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் பாகுபலி போலவே பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘சாஹோ’ மற்றும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய திரைப்படங்களும் பாகுபலி வசூலை நெருங்ககூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து இயக்குனர் மணிரத்னம் ’பொன்னியின் செல்வன்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட்டும் கிட்டதட்ட பாகுபலி படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவதால் இந்தப் படம் நிச்சயம் பாகுபலி படத்தின் வசூலை நெருங்கும் அல்லது முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலியின் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்