மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படம்?

  • IndiaGlitz, [Monday,February 01 2016]

பிரபல இயக்குனர் மணிரத்னம் ஏற்கனவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்களான 'இருவர்' மற்றும் 'குரு' ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் சமீபத்தில் கலந்து கொண்ட மணிரத்னம் அவர்களிடம், 'திரையுலகில் சூப்பர் ஸ்டாராக பல வருடங்களாக இருந்து வரும் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எப்போது திரைப்படம் எடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், 'ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் எடுப்பது நல்ல ஐடியா என்றும் ஆனால் அவருடைய கேரக்டருக்கு ஏற்ற நடிகரை இன்னும் தான் சந்திக்கவில்லை என்றும் அவ்வாறு சந்தித்தால் படமெடுப்பது குறித்து யோசிப்பேன்' என்றும் பதிலளித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'தளபதி' திரைப்படம் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியாகியது. இன்றளவும் இந்த படம் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மாரி 2' உருவாகுவது எப்போது?

தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய்ஜேசுதாஸ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'மாரி' படம்...

தெறி'யில் விஜய்யின் பணி முடிந்தது

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது...

தெறி: விஜய் மகளுக்கு பின்னணி கொடுத்த தேசிய விருது பெற்ற பாடகி

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் படக்குழுவினர்களால் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

ஜீவாவின் 'போக்கிரி ராஜா' டீசர் ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 'யான்' திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில்...

விஜய் 60' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...