அஜித், தனுஷ் படங்களை முந்திய 'காற்று வெளியிடை'

  • IndiaGlitz, [Friday,January 27 2017]

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து, தற்போது இரவுபகலாக விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரும் ஏப்ரல் 7ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'தல 57' திரைப்படம் ரம்ஜான் திருநாளான ஜூன் 23ஆம் தேதியும், தனுஷின் 'பவர்பாண்டி ஏப்ரல் 14ஆம் தேதியும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படங்களுக்கு முன் ஏப்ரல் 7ஆம் தேதியே 'காற்று வெளியிடை' வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது