மணிரத்னம், முருகதாஸ், பாலா வெளியிடும் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,April 19 2017]

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பாலா ஆகியோர் இணைந்து ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடுகின்றனர். அந்த படத்தின் பெயர் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏப்ரல் 20ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு வியாழக்கிழமை அதாவது நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை மூன்று முன்னணி இயக்குனர்கள் வெளியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த பிற விபரங்கள் நாளைய ஃபர்ஸ்ட்லுக் வெளியான பின்னர்தான் தெரியவரும்.