'காற்று வெளியிடை' இசை வெளியீடு. அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,March 17 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' திரைப்படத்திற்கு 'யூ' சர்டிபிகேட்டை சென்சார் அதிகாரிகள் அளித்துள்ளனர் என்பதையும் இந்த படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவலையும் சற்று முன்னர் பார்த்தோம்
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஆஸ்கார் நாயகன் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் வரும் திங்கள் அன்று அதாவது மார்ச் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் ஒருசில பாடல்கள் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மீதி பாடல்களும் அதே வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.