டாஸ்க்கில் தப்பாக விளையாடிய மணி.. தளபதி விஜய் என கூறி வாங்கிய பல்பு..!

  • IndiaGlitz, [Wednesday,January 03 2024]

பிக் பாஸ் டாஸ்க்கில் கேட்ட ஒரு கேள்விக்கு தளபதி விஜய் என தப்பாக பதில் கூறி போட்டியாளர் மணி வாங்கிய பல்பு குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 94-வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக கலந்து கொள்கின்றனர்.

இன்றைய டாஸ்க் இரண்டு கட்டங்களாக நடக்கும் என்றும் முதல் கட்டமாக கார்டனில் வைத்திருக்கும் தடைகளை கடக்க வேண்டும் என்றும் இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனை அடுத்து மணி, விஜய் வர்மா மற்றும் பூர்ணிமா ஆகிய மூவரும் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். அப்போது உன்னை போல் ஒருவன் என்ற டாஸ்க்கில் விஷ்ணுவின் கேரக்டரை ஏற்று நடித்தது யார் என்று கேள்வி கேட்கப்படுகிறது.

இதற்கு அவசரப்பட்டு முதலில் பதில் சொன்ன மணி, தளபதி விஜய் சார் என பதிலளித்தார். அப்போது அர்ச்சனா மற்றும் மாயா தவறான பதில் என்ன கூறிய பிறகு மணி பல்பு வாங்கியவாறு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு பூர்ணிமா, சரியான பதிலை கூறுவதுடன் இன்றைய இரண்டாம் புரமோ முடிவுக்கு வருகிறது.