2 வருஷம் வெயிட் பண்ண போறேன், 2 நிமிஷம் வெயிட் பண்ண மாட்டேனா? ரவீனாவுக்கு சிவந்த முகம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் காதலர்களாக மணி சந்திரா மற்றும் ரவீனா உலவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து விசித்ரா கேட்டபோது கூட ’நாங்கள் சிறந்த நண்பர்கள் தான்’ என்று கூறி இருவரும் சமாளித்தனர். ஆனால் இருவரது நடவடிக்கை காதலர்கள் என்பது போல் தான் உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்னரே இருவரும் நெருக்கமாக இருந்தனர் என்பதும் சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்த புகைப்படங்களை பதிவு செய்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மணி சந்திரா தனக்கு பசிக்குது சீக்கிரம் வா என்று ரவீனாவிடம் கூற அதற்கு ’இரண்டு நிமிடம் வெயிட் பண்ணு’ என்று ரவீனா கூறுகிறார். அப்போது ரெண்டு வருஷம் வெயிட் பண்ண போறேன், ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ண மாட்டேனா என்று மணிச்சந்திரா கூற ரவீனா முகம் சிவந்தார். இருவரும் மாறி மாறி செல்லமாக சண்டை போட்டுக் கொண்டனர்.
இதனை பார்க்கும்போது க்யூட் ஆக இருக்கிறது என்று பார்வையாளர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த சீசன் முடிவதற்குள் மணி - ரவீனா சிறந்த காதலர்களாக வெளியே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Mani to #Raveena
— BBTamilVideos (@BBTamilVideos) November 13, 2023
2yrs wait panran, 2min wait panamatanah #biggbosstamil7 #BiggBossTamil7 #BiggBoss7Tamil pic.twitter.com/0VsJyZxHdI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com