குழந்தைக்கு அவங்க அப்பாவையே அடையாளம் தெரியல கண் கலங்கிய கனி மற்றும் சக்தி கனி
Send us your feedback to audioarticles@vaarta.com
டிக் டாக் செயலி மூலமாக டிரெண்ட் ஆகி ,பின் தம்பதிகளாக வீடியோ வெளியிட்டு அதிக பாலோவர்ஸ்களை சம்பாதித்து, யூடியூப் சேனல் மூலமாக மிகுந்த செல்வாக்கு பெற்று அதே வேகத்தில் விமர்சனங்களை எதிர்கொண்ட கனி மற்றும் அவரது சகோதரி சக்தி அவர்கள், அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
கல்லூரி காலத்திலயே டிக் டாக் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது.வீட்டில் யாரும் சப்போர்ட் பண்ணல. எதேர்ச்சையாக செய்ய போகி அது அதிக மில்லியன் லைக்ஸ் வாங்கி கொடுத்தது.இதை வைத்து அப்பா அம்மா திட்டுவார்கள்.ஏதோ மறைத்து வைத்து வீடியோ செய்து கொண்டிருந்தேன்.அது கொரோனா காலக்கட்டம்.சும்மா இருக்கும் நேரத்தில் டிக் டாக் செய்தேன்.எங்கள் இருவருக்குமே படிப்பு அதற்கு அடுத்து வாலிபால் விளையாட்டு இது தான் தெரியும்.இப்படி ஒரு செயலி இருப்பது தெரிந்து கனி மட்டும் டான்ஸ் ஆடி வீடியோ அப்லோடு செய்வாள்.அப்போலாம் வெறும் டான்ஸ் மட்டுமே ஆடுவேன்.அதனால் ஒரு ஆறு லட்சம் பலோவர்ஸ் இருந்தார்கள்.ஆனால் பெரிதாக முகம் யார் மனதிலும் பதியவில்லை.திருமணத்திற்கு பிறகு தான் எல்லோருக்குமே தெரிய ஆரம்பித்தது.
மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் கனியை போல் ,சக்தி நீங்களும் உங்கள் கணவரும் வீடியோ பண்ணலாம் அல்லவா? என கேட்க ஆரம்பித்தார்கள்.பிறகு எங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.நாங்கள் நல்லாவே இருக்கக் கூடாது என நினைத்தார்கள்.குறிப்பாக இந்த சொந்தக்காரர்கள்.நாங்கள் நால்வருமே வீடியோ செய்யும்போது "எக்கேடோ கெட்டு நாசமா போங்க"என்று சொன்னார்கள்.ஒரு சிலர் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.அவர்கள் எல்லாம் எங்கள் அப்பாவிற்கு போன் கால் செய்து பாராட்டி வாழ்த்துவார்கள்.
எங்களுக்கு விவரம் தெரியாத வரைக்கும் அப்பா எங்களை பார்த்து கொண்டார்.அதன் பிறகு நாங்களே அப்பாவை அதிகமாக பார்த்து கொண்டோம்.அவரை குளிக்க வைப்பது,சாப்பாடு ஊட்டி விடுவது,துணி உடுத்தி விடுவது எல்லாமே நாங்களே செய்வோம்.எங்களை இதுவரை நன்றாக வளர்த்து ஆளாக்கிய மனிதன்.அவரை ரொம்பவே மிஸ் பண்றோம்.
2006 இல் எங்கள் அப்பாவிற்கு ஒரு விபத்து ஏற்பட்டது.அதன் பிறகு வீசிங் பிரச்சினை வந்தது.அதிலிருந்து அப்பாவால் வேலைக்கு போக முடியவில்லை.முழுக்க முழுக்க வீட்டில் தான் இருந்தார்.சமீபத்தில் அப்பா இறந்து ஒரு வாரத்தில் தான் இந்த டாட்டூ குத்தி கொண்டோம்.பல சமயத்தில் தனியாக இருப்பது போல் எண்ணுவோம்.அதை எங்கள் அழுகை மூலமாக வெளிப்படுத்தி கொள்வோம்.அப்பா இல்லாத சமயத்தில் தான் யார் நல்லவர்கள் ! கெட்டவர்கள் என்பதை உணர்ந்தோம்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறோம்.எங்களுக்கு எங்கள் கணவர்களை விட ,எங்களுடைய அத்தையை மிகவும் பிடிக்கும்.எங்கள் அம்மாவை போல் நினைத்தோம்.அப்பா இருக்கும் போது எங்களை ரொம்ப தரக்குறைவாக பேசி விட்டு,அப்பாவின் இறப்பிற்கு பிறகு வந்து தவறாக பேசிட்டோம் என சொல்லி வருந்துவது போல் நடித்தார்கள்..அதை எல்லாம் கடந்து ஓரளவுக்கு சென்று கொண்டிருக்கிறோம் .
அதே போல் எங்கள் அம்மா தான் எங்களுக்கு பெரிய ரோல் மாடல்.அப்பாவிற்கு முடியாத சமயத்தில் கூட ,தனியாளாக இருந்து எல்லாவற்றையும் சமாளித்த பெண் .எனவே ஒரு பெண் தனியாக வாழும்போது தைரியமாக இந்த சமுதாயத்தை எதிர்கொள்ள வேண்டும்.
எங்கள் அப்பா சூப்பர் ஸ்டார் ரசிகர்.கனி விஜய் ரசிகை ..மேலும் நான் சிவகார்த்திகேயன் ரசிகை.எல்லோருமே என்னை ஆன்ட்டி என அழைப்பார்கள்..கனியை என்னமா எத்தனாவது படிக்கிற என்று கேட்பார்கள்.நான் சீமந்தத்தில் பயன்படுத்திய வளையல் ..
நான் கர்ப்பம் தானா என பரிசோதித்த கிட் இவை எல்லாமே என்னுடைய அழகிய நினைவு பொருட்கள்.இவை நாங்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள்.. நாங்கள் எங்கள் கணவர்களை பற்றி பேச விரும்பவில்லை.அவர்களை பற்றிய கேள்வியே வேண்டாம்.
என் குழந்தை மகிமாவிற்கு அவள் அப்பாவை மிகவும் பிடிக்கும்.குழந்தைக்கு அப்பாவுடைய முகம் மறக்கக் கூடாது என்பதால் தான் இந்த பெரிய புகைப்படத்தை இங்கு வைத்துள்ளோம்.மகிமா பசிக்கு மட்டுமே என்னை தேடுவாள்.மற்றபடி எப்போதும் அவள் அப்பாவிடமே ஒட்டி கொண்டிருப்பாள்.
அலருடைய நெஞ்சில் தான் அதிகமாக தூங்குவாள்.சில சமயத்தில் அப்பா எங்கே? எனக் கேட்பாள் .அப்போது மிகவும் வருத்தமாக இருக்கும். என கனி மற்றும் சக்தியின் மனம் வருந்திய பல தருணங்களை மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com