குடும்பத்துடன் மரணம் என வதந்தி: நடிகர் மங்கள நாத குருக்கள் புகார் 

  • IndiaGlitz, [Wednesday,June 02 2021]

பல தமிழ் திரைப்படங்களில் குருக்களாக நடித்து வருபவர் மங்களநாத குருக்கள். இவரும் இவருடைய குடும்பத்தினர்களும் சமீபத்தில் இறந்து விட்டதாகவும் இவர்களை தகனம் செய்யப்பட்ட பணம் இல்லை என்றும் கூறி சில மர்ம நபர்கள் சமூகவலைதளத்தில் பணம் வசூல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் மங்களநாத குருக்கள் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தான் உயிரோடு நலமுடன் இருப்பதாகவும் ஆனால் தான் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை பரப்பி மர்ம நபர்கள் சிலர் பணம் வசூல் செய்திருப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோடு அந்த பொய்யான பதிவை நீக்க வேண்டும் என்றும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மங்களநாத குருக்கள் அவர்கள் குடும்பத்துடன் இறந்துவிட்டதாகவும் தகனம் செய்யக்கூட பணம் இல்லை என்ற போலியான சமூக வலைதள பதிவை பார்த்து பலர் இரக்கமடைந்து பணத்தை அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.