ஷங்கர் மகள் நடிக்க வருவதற்கு இவர்தான் காரணமாம்: நன்றி கூறிய 2டி நிறுவனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சினிமாவில் நடிக்க வருவதாகவும் சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும் ‘விருமன்’ என்ற படத்தின் நாயகி அவர்தான் என்றும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஷங்கர் மகள் நடிக்க வருவது குறித்த தகவல் திரையுலகில் உள்ள யாருக்கும் தெரியாமல் ஆச்சரியமான அறிவிப்பு வெளிவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஷங்கர் மகள் நடிக்க வந்ததற்கு காரணம் மேனேஜர் தங்கதுரை என்று தகவல் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இவர் சூர்யா, ஜோதிகா உள்பட பல பிரபலங்களுக்கு மேனேஜராக இருந்துவரும் நிலையில் சமீபத்தில் இவர் இயக்குனர் ஷங்கருக்கும் மேனேஜர் ஆகியுள்ளார். இதனை அடுத்து ஷங்கர் மற்றும் சூர்யா இடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தான் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘விருமன்’ படத்தில் அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகமாகி இருப்பதாகவும் இதற்கு முழு காரணம் தங்கதுரை தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்வது போல் 2டி நிறுவனத்தின் ராஜசேகர பாண்டியன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மேனேஜர் தங்கதுரை அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேனேஜர் தங்கதுரை சூர்யா, ஜோதிகா, ஷங்கர் மட்டுமின்றி தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான தமன்னா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா லட்சுமி, பிரியங்கா, விஷ்ணு விஷால் உள்ளிட்டவரகளுக்கும் இவர்தான் மேனேஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
Special Thanks to @thanga18 ji for making this possible ?????????? https://t.co/onDHr3hb6A
— Rajsekar Pandian (@rajsekarpandian) September 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com