பிரச்சாரத்தை விட கழுதை உயிர் தான் முக்கியம்! ஓடிப்போய் உதவிய மேனகா காந்தி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அமைச்சரும், இந்திரா காந்தியின் மருமகளுமான மேனகா காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இதற்காக சுல்தான்பூர் தொகுதியில் உள்ள மக்களிடையே வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் கலந்து கொண்டவர்களிடம் பாஜகவிற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
பின் சுல்தான்பூர் தொகுதியில் இருந்து பிரச்சார வாகனத்தில் மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, வழியில் கழுதை ஒன்று காலில் ரத்தம் ஒழுகிய படி வலியால் துடித்துக்கொண்டிருந்தது.
இதன் சத்ததை கேட்டு, உடனடியாக பிரச்சார வாகனத்தை, நிறுத்த சொல்லி.. கழுதையை சென்று பார்த்தார். அதற்க்கு காலில் காயம் மிக மோசமான நிலையில் இருப்பதை அறிந்து, உடனடியாக அதிகாரிகளை அழைத்து பரோலியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கழுதையை கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
மேனகா காந்தி விலங்கின ஆர்வலராக இருந்து விலங்குகளின் பாதுகாப்பிற்கு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில் பத்திரமாக கழுதை பரோலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு பின்பு தான் மீண்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பரோலி கால் நடை மருத்துவமனையில் கழுதையை பரிசோதித்த பின் கழுதைக்கு காலில் புற்றுநோய் உள்ளதாகவும், இதற்கு முதலில் சிகிச்சை கொடுத்த பின்பே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேனகா காந்தி கழுதைக்கு வலி தெரியாதவாறு அறுவை சிகிச்சை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்று பரோலி கால்நடை மருத்துவ மைய இயக்குநர் சதீஷ் யாதவ் கூறியுள்ளார். கழுதைக்காக பாதியிலேயே தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு மேனகா காந்தி இப்படி ஒரு செயலை செய்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments