12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரக்குழந்தைகளுக்கு பின் 67 வயது நபர் எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Tuesday,December 27 2022]

உகாண்டா நாட்டில் 12 மனைவிகளை கொண்ட ஒருவர் 102 குழந்தைகள் மற்றும் 568 பேரக்குழந்தைகளுக்கு பின் எடுத்த அதிரடி முடிவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உகாண்டா நாட்டைச் சேர்ந்த மூசா என்பவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பின் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து அவர் தனது தொழிலை விரிவுபடுத்தி வருமானத்தை அதிகப்படுத்தியதால், அடுத்தடுத்து திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் அடுத்தடுத்து 12 பெண்களை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது அவருக்கு 12 மனைவிகள் மூலம் 102 குழந்தைகள் உள்ளன என்றும் தெரிகிறது.

மூசாவுக்கு ஓரளவு நல்ல வருமானம் வந்தாலும் 102 குழந்தைகள் மற்றும் 568 பேரக் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் திணறுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் அதிரடி முடிவு எடுத்து இனிமேலும் குழந்தை பெற்று கொள்ள வேண்டாம் என முடிவு செய்து தனது 12 மனைவிகளையும் கருத்தடை செய்ய வற்புறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இனிமேலும் குழந்தைகள் பெற்றால் அவர்களை காப்பாற்ற முடியாது என்றும் ஒரு மிகப்பெரிய சந்ததிக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அவரது 102 குழந்தைகள் மற்றும் 568 பேரக் குழந்தைகளின் பெயரை கூட தன்னால் முழுமையாக சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராம தலைவர் மற்றும் தொழிலதிபராக இருந்தாலும் இவ்வளவு பெரிய குடும்பத்தை சமாளிக்க அவரால் சம்பாதிக்க முடியாததால் மனைவிகள் அனைவரையும் கருத்தடை செய்ய அவர் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது குழந்தைகள் அனைவரையும் படிக்க வைக்க அரசாங்கத்திடம் உதவி கேட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.