ஒரே டிக்கெட்டில் 3,200 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி… தலைச்சுற்ற வைக்கும் தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,February 01 2022]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கிய நபருக்கு இந்திய மதிப்பில் 3,200 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது. இதிலுள்ள சோகம் என்னவென்றால் இதை வென்ற நபர் யாரென்பது இதுவரை தெரியாமல் இருப்பதுதான்.

கலிபோர்னியா மாகாணத்தில் 421 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை என அறிவிக்கப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கல்வியை மையமாக வைத்து அறிவிக்கப்பட்ட இந்த டிக்கெட்டின் விற்பனையானது விண்ணைத் தொடும் அளவிற்கு இருந்ததால் பரிசுத்தொகை 426 டாலர் அளவிற்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள உட்லேண்ட் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் செவ்ரான் எனும் எரிவாயு நிலையப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட ஒரு டிக்கெட்டிற்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதனால் அந்த டிக்கெட்டை வைத்திருக்கும் நபருக்கு 3,200 கோடி கிடைக்கும். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையே இந்த லாட்டரி டிக்கெட்டின் முடிவு வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை அந்த டிக்கெட்டை வாங்கிய நபர் நிர்வாகத்தை அணுகவேயில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து பரிசு வென்ற நபருக்கு இன்னும் ஒரு வருடம் வரை காலஅவகாசம் இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை வெல்வது என்பது பெரும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. அந்த நபர் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய டிக்கெட்டைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என லாட்டரி நிர்வாகம் அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மஞ்சள் ஜாக்கெட் ஒரு லட்சமா? நடிகை சமந்தாவால் ஷாக்கான ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா

திருமணத்தால் சினிமா வாழ்க்கையில் பாதிப்பா? காஜல் அகர்வால் கூறிய நெகிழச்சி பதில்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால்

கிளாமரை தொடர்ந்து… நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றவர்

மிஸ் அமெரிக்க அழகி 60 மாடி கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை… சோகச் சம்பவம்!

அமெரிக்காவில் மிஸ் அமெரிக்க அழகிப் போட்டியில் கலந்துகொண்டு

'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதியை அடுத்து மற்றொரு மெகா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பெரிய படங்களின் ரிலீஸ் தேதியும் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது