ஒரே டிக்கெட்டில் 3,200 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி… தலைச்சுற்ற வைக்கும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கிய நபருக்கு இந்திய மதிப்பில் 3,200 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது. இதிலுள்ள சோகம் என்னவென்றால் இதை வென்ற நபர் யாரென்பது இதுவரை தெரியாமல் இருப்பதுதான்.
கலிபோர்னியா மாகாணத்தில் 421 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை என அறிவிக்கப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கல்வியை மையமாக வைத்து அறிவிக்கப்பட்ட இந்த டிக்கெட்டின் விற்பனையானது விண்ணைத் தொடும் அளவிற்கு இருந்ததால் பரிசுத்தொகை 426 டாலர் அளவிற்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள உட்லேண்ட் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் செவ்ரான் எனும் எரிவாயு நிலையப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட ஒரு டிக்கெட்டிற்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதனால் அந்த டிக்கெட்டை வைத்திருக்கும் நபருக்கு 3,200 கோடி கிடைக்கும். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையே இந்த லாட்டரி டிக்கெட்டின் முடிவு வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை அந்த டிக்கெட்டை வாங்கிய நபர் நிர்வாகத்தை அணுகவேயில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து பரிசு வென்ற நபருக்கு இன்னும் ஒரு வருடம் வரை காலஅவகாசம் இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை வெல்வது என்பது பெரும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. அந்த நபர் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய டிக்கெட்டைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என லாட்டரி நிர்வாகம் அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com