2027இல் இருந்து வந்த உலகின் கடைசி மனிதன்… நெட்டிசன்களை அலற வைக்கும் டிக்டாக் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் உலக மக்கள் அனைவரும் மரண பீதியில் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த நேரத்தில் 2027 இல் இருந்து வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு நபர் வரும் நாட்களில் உலகமே வெறிச்சோடிதான் இருக்கும். சாலைகள் எங்கும் அமைதியாக இருக்கும். மக்கள் நடமாட்டமே இருக்காது. மால்களும் கடைகளும் வெறுமையாகக் காணப்படும் என்பது போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் புது சர்ச்சையை கிளப்பி வருகிறார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜேவியர் எனும் நபர் டிக்டாக் வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். இவருக்கு 1.2 மில்லியன் மக்கள் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜேவியர் தான் 2027 ஆம் ஆண்டில் இருந்து வருவதாகச் சொல்லிக் கொள்கிறார். அதோடு இதற்கு ஆதாரமாக 2027 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பல வீடியோ ஆதாரங்களையும் அவர் டிக்டாக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
உண்மையில் ஜேவியர் கூறுவதைக் கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். அதோடு சோஷியல் மீடியாவில் நடக்கும் நூற்றுக்கணக்கான வினோதங்களில் இதுவும் ஒன்று என நகர்ந்து விடுவோம். ஆனால் ஜேவியர் தான் உண்மையிலேயே 2027 ஆம் ஆண்டில் இருந்துதான் வருகிறேன் என்பதை நிரூபிக்க திரும்ப திரும்ப முயற்சித்து வருகிறார். இதற்கு ஆதாரமாக அவர் வெளியிடும் வீடியோக்களில் எந்த மனிதர்களும் இடம்பெறவில்லை. சாலைகள், கடைகள், மால்கள் என அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து பேசிய ஜேவியர் எதிர்காலத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். அதைத்தான் எனது வீடியோ காட்சிப்படுத்தி இருக்கிறது. உலகம் அழிவுகரமானது என்று கூறும யூனிகோ சோபிரெவிரவன்ட் எனும் புது கோட்பாட்டையும் அவர் வலியுறுத்தி வருகிறார். அதாவது சோபிரெவிரவன்ட் என்றால் ஸ்பெயின் மொழியில் உலகம் அழிவுகரமானது என்பதைக் குறிப்பதாகும். ஆக ஜேவியர் கூற்றின்படி வரும் 2027 ஆம் ஆண்டின்போது இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். சோலாவாக அவர் மட்டும் சாலைகளில் நடமாடிக் கொண்டு இருப்பார் என்பதைத்தான் அவர் கூற வருகிறார்.
ஜேவியரின் இந்த வினோதக் கருத்துக்களை பார்க்கும் சிர் லாக்டவுன் நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார். உலகம் 2027 எப்படி அழிந்து போகும். எதற்காக இப்படியொரு வீடியோவை வெளியிடுகிறார். இதெல்லாம் சதிக்கோட்பாட்டை பேசுபவர்கள் செய்யும் மடத்தனம் என சரமாரியாகத் திட்டி வருகின்றனர். இப்படி இல்லாமல் ஜேவியரின் வீடியோக்களை ரசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments