காதலியை சர்ப்ரைஸ் செய்ய வீட்டையே தியேட்டராக மாற்றிய இளைஞர்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க முடியாமல் சினிமா ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது காதலிக்கு திரையரங்கு அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக தனது வீட்டையே இளைஞர் ஒருவர் திரையரங்கமாக மாற்றிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
அந்த வீடியோவின் ஆரம்பத்தில் ’தியேட்டருக்கு செல்ல விரும்புகிறாயா’ என்று காதலன் கேட்டபோது அதற்கு அவரது காதலி ’தற்போதுதான் தியேட்டர் மூடி இருக்கிறதே’ என்று கூறுகிறார். அதனை அடுத்து முதல் சர்ப்ரைஸை கொடுக்கும் வகையில் தியேட்டர் டிக்கெட் ஒன்றை அவர் கையில் கொடுத்து அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்
அப்போது வீட்டின் உள்ளே தியேட்டரில் டிக்கெட்டை பெறுபவர் போல ஒருவர் டிக்கெட்டை அவரிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார். இன்னொருவரோ அவருக்கு பாப்கார்ன் மற்றும் கோலாவை கொடுக்கிறார். அதன் பின்னர் அவரை அழைத்து செல்லும் காதலர், தியேட்டரில் இருப்பது போலவே ஆடிட்டோரியம் 1, ஆடிட்டோரியம் 2 என வரிசையாக உள்ளதை காண்பித்து அதில் ஒரு ஒரு ஆடிட்டோரியத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார்
உள்ளே ஒரு பெரிய டிவியுடன் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்ப்பது போன்ற அமைப்பு உள்ளது. அதில் அருகருகே இருவரும் உட்கார்ந்து படம் பார்க்கின்றனர். காதலிக்கு தியேட்டர் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக காதலர் செய்த இந்த ஏற்பாடுகள் குறித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
@michaelandmarisa Suprised Marisa with an at home date night ?? ?? ?? ##foru ##foryoupage ##fyp ##datenight ##bedroomcheck ##couple ##howto ##diy
♬ original sound - michaelandmarisa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com