தன்னுடைய Friend request ஐ ஏற்காத முதலாளிக்கு கொலை மிரட்டல்… நெட்டிசன்களையே அதிர வைத்த சம்பவம்!!!

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

சோஷியல் மீடியா என்பது ஒரு தனிப்பட்ட நபரை சமூகத்தில் உள்ள மற்ற நபர்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள உதவுகிறது. அதேபோல அவர்களின் திறமை மற்றும் எண்ணவோட்டங்களையும் இதன் மூலம் வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இப்படியான சோஷியல் மீடியாவில் யார் வேண்டுமானாலும் நண்பர்களாக இருக்கலாம். அல்லது நட்பை முறித்துக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமை உண்டு.

இந்நிலையில் face book இல் தன்னுடைய Friend request ஐ ஏற்காத ஒரு நபருக்கு இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது வீட்டிற்கே சென்று அச்சுறுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 29 வயதான இளைஞர் காலேப் புர்சிக் தன்னுடைய முன்னாள் முதலாளி ஒருவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு Friend request அனுப்பி இருக்கிறார். அந்த request க்கு 2 நாட்கள் ஆகியும் எந்த பதிலும் இல்லை. இதனால் கடுப்பான அந்த இளைஞர் “எனது பிரண்ட் ரெக்குவஸ்ட்டை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது நான் உங்களை கொன்று விடுவேன்” எனச் செய்தி அனுப்பி இருக்கிறார்.

இப்படி மிரட்டல் விடுத்தும் அவருடைய Friend request க்கு எந்தப் பதிலும் இல்லை. இதனால் கோவத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த இளைஞர் வேறொரு அக்கவுண்டில் இருந்து உங்கள் வீட்டிற்கு புதிய கதவு ஒன்று வாங்க வேண்டி இருக்கும் என்ற செய்தியை அனுப்பி இருக்கிறார். அதோடு விட்டு இருந்தாலும் பரவாயில்லை.

தன்னுடைய முதலாளியின் வீட்டிற்கே சென்று அவரது வீட்டு கதவையும் அடித்து நொறுக்கி இருக்கிறார். இதையடுத்து சிசிடி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை செய்த போலீசார் கடையில் இது Friend request குறித்த வழக்கு என்பதை புரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் காலேப் புர்சிக் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை இவர் அதீத இணையப் பயன்பாட்டினால் மன அழுத்ததிற்கு ஆளாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.