மனைவி, குழந்தைகளைப் பார்க்க வேண்டும்? அசால்ட்டா பேருந்தையே திருடிய இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகப் தற்போது பல்வேறு மாநிலங்களில் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து எதுவும் செயல்படாமல் இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரு இளைஞர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பேருந்தையே திருடிச் சென்றதோடு வழியில் உள்ள போலீஸாரையும் ஏமாற்றிய சம்பவம் படு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவின் பதனாம்திட்டா பகுதியில் வசித்து வருபவர் பினூப். இவர் வேலை காரணமாக 4 மாவட்டங்கள் தாண்டி வசித்து வருகிறார். ஆனால் மனைவி, குழந்தைகள் அனைவரும் பதனாம்திட்டாவில் இருக்கின்றனர். தற்போது கேரளாவில் தீடிரென போடப்பட்ட ஊரடங்கினால் பினூப் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. இதனால் மனைவி குழந்தைகளைப் பார்க்க முடியாமல் தவித்துப்போன பினூப் கோழிக்கோட்டில் நின்றிருந்த பேருந்து ஒன்றை அசால்ட்டாக திருடி உள்ளார்.
கோழிக்கோட்டில் இருந்து மலப்புரம், திருச்சூர், கோட்டயம், குமரகம் என 4 மாவட்டங்களைக் கடந்து பேருந்தையும் ஓட்டிச் சென்றுள்ளார். இதற்கிடையில் வழியில் நின்றிருந்த காவலர்கள் பினூப்பை விசாரிக்கவும் செய்துள்ளார். ஆனால் பினூப் இதற்கு கொஞ்சமும் யோசனை செய்யாமல் பதனாம்திட்டாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு அதிகாரிகள் என்னை அனுப்பி உள்ளனர் எனப் பொய் கூறி இருக்கிறார்.
இதை நம்பிய 4 மாவட்ட காவலர்களும் பினூப்பை வழி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சந்தேகம் அடைந்த குமரகம் போலீஸார் பினூப்பிடம் கெடுபிடி காட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன பினூப் ஒருவழியாக உண்மையை ஒப்புக்கொண்டு பேருந்தை ஒப்படைத்து உள்ளார். கொரோனா ஊரடங்கில் பலரும் வேலை வாய்ப்பை இழந்து, குடும்பத்தை விட்டு தள்ளி இருக்கும் சூழலில் இதுபோன்ற சுவாரசிய சம்பவமும் நடைபெற்று இருப்பது பலரையும் வியக்க வைத்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout