வீட்டில் இடம் இல்லை: 7 நாட்கள் பொதுகழிப்பறையில் தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி இருப்பதை அடுத்து தமிழகத்தில் இருந்து புவனேஸ்வர் சென்ற இளைஞர் ஒருவர் தனிமைப்படுத்திக் கொள்ள இடம் இல்லாததால் கழிவறையில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பணி செய்து கொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் தன்னுடைய சொந்த ஊரான புவனேஸ்வர் சென்றார். அங்கு அவர் ஒரு வாரம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட பின் வீட்டில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அவர் அறிவுறுத்தப்பட்டார்.
ஆனால் அந்த இளைஞர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள இடமில்லை என்றும் தனது வீட்டில் மொத்தம் ஆறு நபர்கள் உள்ளார்கள் என்பதால் அதனால் மேலும் ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனை அடுத்து வேறு வழியின்றி வீட்டுக்கு சென்ற அந்த இளைஞர் ’தூய்மை இந்தியா’ திட்டத்தில் கட்டித்தந்த புதிய பொதுகழிப்பறையில் ஒரு வாரம் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். ஜூன் மாதம் 9ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒரு வாரம் அந்த கழிவறையின் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்ட பின்னரே அவர் தனது வீட்டிற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள இடம் இல்லாததால் கழிவறையில் ஒரு வாரம் தங்கி இருந்த இளைஞரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.