ஒரு முட்டை சோற்றுக்காக ஏற்பட்ட கத்திக்குத்து… பரபரப்பு சம்பவம்!!!
- IndiaGlitz, [Monday,November 02 2020]
திருவண்ணாமலை மாவட்டத்தில் எக்(ege) ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்த ஒருவர் அந்த கடையின் உரிமையாளரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்தின் கினுகிலுப்பாய் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாய் யாசீன் என்பவர் யுவராஜ்(21) எனும் இளைஞருடன் சாப்பிடுவதற்காக சென்றிருக்கிறார்.
உணவகத்திற்கு சென்றதும் யாசீன் ஒரு எக் ப்ரைட் ரைஸை ஆர்டர் செய்திருக்கிறார். இந்நிலையில் கடையின் உரிமையாளர் சத்யராஜ்(25) என்பவர் அந்த உணவைத் தயாரித்து யாசீனுக்கு பரிமாறி இருக்கிறார். உணவை சாப்பிட்டு பார்த்த யாசீன் இது சரியாகவே வறுபடவில்லை, என்ன சாப்பாடு இது என சத்யராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
இப்படி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் கைகலப்பாகி இருக்கிறது. அப்போது உச்சக்கட்ட கோபத்தில் இருந்த யாசீன் பக்கத்தில் இருந்து கத்தியை எடுத்து கடையின் உரிமையாளர் யாசீனுடைய வயிற்றில் சொருகி விட்டார். இதை முற்றிலும் எதிர்பாராத அவர் அங்கேயே சரிந்து விழ இந்தச் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சத்யராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு முட்டைச் சோற்றுக்காக ஆத்திரப்பட்டு கடையின் உரிமையாளரை தாக்கிய யாசீன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.