தினம் ஒரு காதலி… 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்துவரும் அதிசய மனிதன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தாய்லாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பார்த்த இடத்திலேயே மனதைப் பறிக்கொடுத்து தற்போது 8 திருமணங்களைச் செய்துகொண்டுள்ளார். இதிலுள்ள அதிசயம் என்னவென்றால் இந்த 8 பேரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்துவருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டாட்டூ கலைஞரான ஓங் டாங் சோரூட் முதலில் தன்னுடைய நண்பனின் திருமணத்தில் ஒரு பெண்ணை பார்த்து காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அடுத்து மார்க்கெட்டில், அடுத்து மருத்துவமனை எனப் பார்த்த இடங்களிலேயே மனதைப் பறிக்கொடுத்து 2,3 ஆவது திருமணங்களை செய்துக்கொண்டுள்ளார். பின்பு சோஷியல் மீடியாவில் பழகி 4,5,6 ஆவது திருமணங்களை செய்துகொண்ட அவர் தனது தாயாருடன் கோவிலுக்குச் சென்றபோது ஒரு பெண்ணை பார்த்து 7 ஆவது திருமணத்தை முடித்திருக்கிறார்.
அடுத்து 7 மனைவிகளுடன் சுற்றுலா சென்றபோது ஒரு பெண்ணைப் பார்த்து 8 ஆவது திருமணத்தை முடித்திருக்கிறார். இந்தத் தகவலைக் கேட்கும் நமக்கு தலையே சுற்றலாம். ஆனால் தனது திருமணம் குறித்துப் பேசிய ஓங் அனைத்துப் பெண்களையும் பார்த்த இடங்களிலேயே மனதைப் பறிக்கொடுத்துவிட்டேன் எனக் கூறுகிறார். அதேபோல திருமணம் ஆன ஒரு ஆணை நீங்கள் ஏன் திருமணம் செய்துகொண்டீர்கள் என்று அந்தப் பெண்களிடம் கேட்டால் டாங் சோரூட் மீது தீராத காதலில் விழுந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
இந்த அதிசயத்தைவிட இன்னொரு அதிசயம், 8 பேரை திருமணம் செய்துகொண்ட டாங் சோரூட் ஒரே வீட்டில் வசித்துவருகிறார். அதோடு தனது மனைவிகளுக்குள் சண்டையே வருவதில்லை என்றும் கூறுகிறார். இதற்கு ஒரே காரணம் டாங் சோரூட் தனது மனைவிகள் மீது எந்தவிதப் பாரபட்சமும் காட்டுவதில்லையாம். மேலும் சோரூட்டின் அன்பான குணமே இதற்குக் காரணம் என்றும் அந்தப் பெண்கள் அவருக்கு சான்றிதழ் கொடுக்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில் தனது இல்லற வாழ்க்கைப் பற்றி கூறிய அவர் தினமும் ஒருவருடன் தனது நேரத்தை செலவிடுவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தத் தகவல் இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments