தினமும் குளிப்பதில்லை? மனைவியிடம் விவாகரத்துக் கோரிய கணவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் ஒருவர், தனது மனைவி தினமும் குளிப்பதில்லை. குளிக்கச் சொன்னாலே சண்டை வருகிறது. அதனால் அவருடன் வாழப்பிடிக்கவில்லை எனக்கூறி “முத்தலாக்“ சொல்லி விவகாரத்து செய்திருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன மனைவி தற்போது மகளிர் பாதுகாப்பு கவுன்சிலை அணுகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அலிகார் அடுத்த சண்டூஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் குவார்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. மேலும் 1 வயதில் ஒரு குழந்தையும் இவர்களுக்கு உள்ளது. இந்நிலையில் தினமும் என் மனைவி குளிப்பதில்லை. குளிக்கச் சொன்னாலே சண்டை வருகிறது. இதனால் அந்தக் கணவர் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மகளிர் பாதுகாப்பு கவுன்சிலை அணுகி தனது பிரச்சினையை எடுத்துக் கூறியுள்ளார். இதனால் மனநல ஆலோசகர்கள் கவுன்சிலிங் வழங்கிய நிலையில் கணவன் ஒரேயடியாக விவகாரத்து வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டும் மனைவி அவருடன் வாழ விரும்புகிறேன். சேர்த்த வையுங்கள் என கெஞ்சுவதுமாக இருக்கிறது.
இந்நிலையில் இதெல்லாம் ஒரு சாதாரண காரணம். குழந்தையின் எதிர்காலத்தை பாருங்கள். இப்படி சாதாரண காரணத்திற்கு விவகாரத்து செய்ய நினைத்தால் யாரும் நிம்மதியாக வாழவே முடியாது. குழந்தையை நினைத்து சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்று அறிவுரை கூறி மனநல ஆலோசகர்கள் அனுப்பி வைத்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com