சோஷியல் மீடியாவிற்கு அடிமையாகாத பெண் வேண்டும்… இணையத்தில் வைரலாகும் விளம்பரம்!!!

  • IndiaGlitz, [Wednesday,October 07 2020]

 

திருமணத்திற்கு பெண்ணைத் தேடும் விளம்பரம் ஒன்று இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் அந்த விளம்பரத்தில் சோஷியல் மிடியாவிற்கு அடிமையாகாத பெண் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் இதுமுடியாது கண்ணா… வேறு கிரகத்தில்தான் தேட வேண்டும் என கலாய்த்து வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலம் கமார்புகூர் பகுதியைச் சார்ந்த வழக்கறிஞர் சாட்டர்ஜி என்பவர்தான் இப்படியொரு விளம்பரத்தை கடந்த சனிக்கிழமை அன்று ஒரு செய்தித்தாளில் வெளியிட்டு இருக்கிறார். அதில் “அழகான ஒல்லியான பெண் வேண்டும். என்னிடம் வீடு, கார் உள்ளது. மணமகளிடம் இருந்து எதையும் எதிர்ப் பார்க்கவில்லை. ஆனால் அந்தப் பெண் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது” எனக் குறிப்பிடப்பிட்டு இருக்கிறார்.  

இந்த விளம்பரத்தை ஐஏஎஸ் அதிகாரியான நிதின் சாங்வான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மாறிவரும் காலச்சூழல் பற்றி கருத்துக் கூறியிருக்கிறார். அந்தக் கருத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்ட நமது நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவிற்கு அடிமையாகாத பெண் தேவை என்பதை  மட்டும் காதில் வாங்கிக்கொண்டு வழக்கறிஞரை வகையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படியான பெண் தேடும் படலத்திற்கு டிவிட்டரில் பலர் குட்லக்கும் சொல்லி வருகின்றனர். தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சோஷியல் மீடியாவை பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் சூழல் உருவாகி விட்டது. அதுவும் மொபைல் போனை அதிகம் பயன்படுத்தாதவர்கள் கூட தினமும் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என ஏதேனும் ஒரு வலைத் தளத்தை தொட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அப்படி இருக்கும் சூழலில் இப்படி  ஒருபெண்ணை தேடுவது சிரமம்தான் எனப் பலரும் இணையத்தில் கருத்துக் கூறிவருகின்றனர். 

More News

இங்கிலாந்து பல்கலையில் படிக்க பட்டியலின மாணவிக்கு உதவிய தமிழ் நடிகர்!

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படிக்க பட்டியலின மாணவி ஒருவருக்கு தமிழ் நடிகர் ஒருவர் உதவி செய்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

புதுமுக நடிகரை விஜய்சேதுபதியுடன் ஒப்பிட்ட சரண்யா பொன்வண்ணன்!

அஜித், விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்தவர் சரண்யா பொன்வண்ணன் என்பது தெரிந்ததே.

பல மொழிகளில் உருவாகும் தனுஷின் அடுத்த படம்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்றும் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்

விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' இத்தனை கோடி வசூலா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே.

வேதியியல் துறைக்கான நோபல் பரிசை கூட்டாகத் தட்டிச் செல்லும் இரு பெண்கள்…

நோபல் பரிசு 2020 க்கான பட்டியலை நோபல் அறக்கட்டளை நேற்று முன்தினம் முதல் வெளியிட்டு வருகிறது.