சோஷியல் மீடியாவிற்கு அடிமையாகாத பெண் வேண்டும்… இணையத்தில் வைரலாகும் விளம்பரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்திற்கு பெண்ணைத் தேடும் விளம்பரம் ஒன்று இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் அந்த விளம்பரத்தில் சோஷியல் மிடியாவிற்கு அடிமையாகாத பெண் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் இதுமுடியாது கண்ணா… வேறு கிரகத்தில்தான் தேட வேண்டும் என கலாய்த்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் கமார்புகூர் பகுதியைச் சார்ந்த வழக்கறிஞர் சாட்டர்ஜி என்பவர்தான் இப்படியொரு விளம்பரத்தை கடந்த சனிக்கிழமை அன்று ஒரு செய்தித்தாளில் வெளியிட்டு இருக்கிறார். அதில் “அழகான ஒல்லியான பெண் வேண்டும். என்னிடம் வீடு, கார் உள்ளது. மணமகளிடம் இருந்து எதையும் எதிர்ப் பார்க்கவில்லை. ஆனால் அந்தப் பெண் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது” எனக் குறிப்பிடப்பிட்டு இருக்கிறார்.
இந்த விளம்பரத்தை ஐஏஎஸ் அதிகாரியான நிதின் சாங்வான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மாறிவரும் காலச்சூழல் பற்றி கருத்துக் கூறியிருக்கிறார். அந்தக் கருத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்ட நமது நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவிற்கு அடிமையாகாத பெண் தேவை என்பதை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு வழக்கறிஞரை வகையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படியான பெண் தேடும் படலத்திற்கு டிவிட்டரில் பலர் குட்லக்கும் சொல்லி வருகின்றனர். தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சோஷியல் மீடியாவை பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் சூழல் உருவாகி விட்டது. அதுவும் மொபைல் போனை அதிகம் பயன்படுத்தாதவர்கள் கூட தினமும் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என ஏதேனும் ஒரு வலைத் தளத்தை தொட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அப்படி இருக்கும் சூழலில் இப்படி ஒருபெண்ணை தேடுவது சிரமம்தான் எனப் பலரும் இணையத்தில் கருத்துக் கூறிவருகின்றனர்.
Prospective brides/grooms please pay attention.
— Nitin Sangwan, IAS (@nitinsangwan) October 3, 2020
Match making criteria are changing ?? pic.twitter.com/AJZ78ARrHZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments