செல்போன் அலர்ஜியா??? இப்படியும் ஒரு விசித்திர மனிதன்!!!
- IndiaGlitz, [Monday,November 23 2020]
பிரிட்டன் நாட்டில் வாழும் 48 வயதான ஒரு நபருக்கு மின்சாரத்தினால் இயங்கும் எந்தப் பொருட்களைப் பார்த்தாலும் அலர்ஜியாம். அதுவும் செல்போன் என்றால் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடுவாராம். இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரம் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைமை உருவாகி விட்டது. அதுவும் மொபைல் போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட என்னால இருக்க முடியாதுப்பா என்று சொல்லும் அளவிற்கு பலரும் செல்போன் அடிமைகளாக மாறிவிட்டோம்.
அப்படி இருக்கும்போது பிரிட்டனை சேர்ந்த புருனோ பாரிக் என்பவர் மின்சாரம், செல்போன், டிவி என அனைத்து இயந்திரங்களையும் தள்ளி வைத்து விட்டு காட்டு வாசிபோல வாழ்ந்து வருகிறார். இதற்கு காரணம் அவருக்கு இதெல்லாம் பிடிக்காமல் இல்லை. அவருடைய உடலுக்குத்தான் மின்சாரம் மற்றும் செல்போன்களினால் ஏற்படும் கதிர்வீச்சு ஒத்துக் கொள்ளாமல் ஒவ்வாமையை உண்டாக்குகிறது. இதனால் பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் இவர் தற்போது ஒரு காட்டுவாசி போல செல்போன், மின்சாரம் என அனைத்தையும் துறந்து விட்டு வாழ்ந்து வருகிறார்.
பிரிட்டன் ஹைம்ப்டன்ஷையர் நகரில் உள்ள ரோத்வெல் பகுதியில் வசித்து வரும் இவரைப் பார்க்கும் பலருக்கும் ஆச்சர்யம் தான் ஏற்படுகிறது. மனித நாகரிக வளர்ச்சியில் மின்சாரம் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்பினால் மனித வாழ்க்கை கிடுகிடுவென உயர்ந்து பல முன்னேற்றங்களை அடைந்து விட்டது. ஆனால் அது உண்டாக்கும் கதிர்வீச்சு அபாயங்களைப் பற்றி உலக நாடுகள் இதுவரை பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. காரணம் கட்டுப்பாட்டு அளவையும் தாண்டி மனித நாகரிக வளர்ச்சி எங்கேயோ போய்விட்டது என்பதுதான் நிதர்சனம்.