ஒருநாளில் 30 நிமிடம் உறக்கம்… ஆனாலும் உற்சாகமாக இருக்கும் விசித்திர இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜப்பானில் நாட்டில் உள்ள இளைஞர் ஒருவர் தினமும் 30 நிமிடமே உறங்குகிறாராம். ஆனாலும் அந்த இளைஞரிடம் உடல் சோர்வோ அல்லது தூக்கமின்மைக்கான அறிகுறியோ காணப்படவில்லை என்பதுதான்ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய தினசரி வாழ்க்கையில் 6 மணிநேரம் தூங்காமல் இருந்தால் எண்ணற்ற உடல்நலக் கோளாறுகளைச் சந்திக்க வேண்டிவரும். எப்படி ஒரு மனிதனுக்கு உணவு முக்கியமோ அப்படி தூக்கமும் முக்கியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டிலுள்ள டேய்சுகே ஹோரி எனும் 30 வயது இளைஞர் கடந்த 12 வருடங்களாகத் தினமும் வெறுமனே 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார்.
மேலும் இவர் குறைவான நேரம் தூங்குவோர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இதைத்தவிர மற்ற இளைஞர்களுக்கும் குறைவான நேரம் மட்டுமே தூங்குவது எப்படி எனப் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார். இதைப்பார்த்த அந்நாட்டு ஊடகங்கள் இளைஞரின் தினசரி வாழ்க்கையை கண்காணித்து வீடியோ எடுக்க விரும்பி இருக்கிறது. இதற்கு டேய்சுகே ஒப்புதல் அளித்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து டேய்சுகேவின் தினசரி வாழ்க்கை படமாக்கப்பட்டது.
இந்நிலையில் காலை 8 மணிக்கு உடற்பயிற்சி கூடம் செல்லும் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு படிப்பது, எழுதுவது, நண்பர்களைச் சந்திப்பது, வெளி இடங்களுக்கு செல்வது என்று நாட்களை ஓட்டுகிறார். ஆனால் நம்மைப் போன்று அவர் இரவு நேரங்களில் தூங்குவதே இல்லை. அதிகாலை 2 மணி வாக்கில் தூங்குச் செல்லும் அவர் மீண்டும் 26 நிமிடங்கள் கழித்து எழுந்து கொள்கிறார். மீண்டும் அடுத்த நாள் வாழ்க்கை தொடர்கிறது.
இதுகுறித்து வியந்துபோன சிலர் டேய்சுகே விடம் இதுபற்றி கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக நான் தூங்குவதைக் குறைத்துக் கொண்டேன். அப்படியே அந்த தூக்கம் 30 நிமிடங்களாக குறைந்து விட்டது. ஆனால் தூக்கமின்மையால் நான் ஒருநாளும் உடல்சோர்வை உணர்ந்ததே இல்லை எனக் கூறியிருக்கிறார்.
இதைத்தவிர தூங்காமல் இருப்பதற்கு டேய்சுகே தினமும் காஃஃபின் எடுத்துக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். டேய்சுகேவின் வாழ்க்கையை பார்க்கும் சிலர் உலகில் இப்படியுமா? மனிதர்கள் இருக்கின்றனர் என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments