இப்படி ஒரு ப்ரபோசலா??? அசந்துப்போன காதலி…
- IndiaGlitz, [Saturday,December 19 2020]
அயர்லாந்து நாட்டில் ரயிலை இயக்கும் ஒரு பெண்ணிற்கு வந்த ப்ரபோசல்தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்நாட்டில் இயங்கும் ரயில் ஒன்றின் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறார் பாலா. அவரிடம் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த கொனர் எனும் இளைஞர் வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொண்டு தனது காதலியை வியக்க வைத்து இருக்கிறார்.
பாலா இயக்கி வந்த ரயில் பியர்ஸ் எனும் ரயில் நிலையத்தை நெருங்கியவுடன் வெறும் பதாகைகளாகக் காட்சி அளிக்கிறது. அதில் ரயில் நிலையத்தில் சிங்கிளாக நிற்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்வாயா என்பது போன்று அடுக்கடுக்கான வார்த்தைகளில் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதைப் பார்த்த பாலா சந்தேகத்துடன் ரயிலை உரிய இடத்தில் நிறுத்துகிறார். அங்கு பார்த்தால் அவருடைய தோழர் கொனார் நிற்கிறார். உடனே இந்த ப்ரபோசல் தனக்குத் தான் எனப்புரிந்து கொண்ட பாலா ரயிலை விட்டுஇறங்கி வருகிறார். அவரிடன் பூக்களை நீட்டுகிறார் கொனார்.
இதையெல்லாம் சற்றும் எதிர்பாராத பாலா, கொனாரின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இந்தக் காட்சிகளை அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு பார்க்கின்றனர். மேலும் வீடியோவாகவும் எடுக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரல் ஆகி இருக்கிறது.