மாடு திருடியதாக இஸ்லாமியர் ஒருவர் படுகொலை… இளைஞர் கும்பலின் வெறிச்செயல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல படுகொலைகள் நடந்தேறின. இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சிகள் மட்டும் கண்டனம் தெரிவித்த நிலையில் இதற்கான தீர்வு எதுவும் காணப்படவில்லை. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் பசு திருடியதாகச் சந்தேகப்பட்ட இளைஞர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள புல்வாரிஷரிஃப் எனும் பகுதியில் நேற்று முன்தினம் முகமது அலாம் கிர் எனும் 32 வயது இளைஞர் மாட்டுத் தொழுவத்தில் இருந்த பசுவை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த ஒரு கும்பல் அந்த இளைஞரை தடுக்க முயன்றதாகச் சொல்லி, அடித்தே கொன்று இருக்கின்றனர். பல பேர் சேர்ந்து தாக்கியதால் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் வலி தாங்காமல் கதறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அலாம் கிர் மாடு திருடுவதற்காக இன்னொரு நபரையும் அழைத்து வந்தார், நாங்கள் வந்ததும் ஓடிவிட்டார் என அந்தக் கும்பல் குற்றம் சாட்டி இருக்கிறது. இச்சம்பவம் டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடந்ததாகப் போலீஸ் தரப்பு குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் உடனடியாகக் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என அம்மாநில அரசு உத்தரவாதம் அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout