பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை… ஆன்லைன் சூதாட்டத்தால் நேர்ந்த கொடுமை!!!

  • IndiaGlitz, [Monday,October 19 2020]

 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் வியாபாரி ஒருவர் பல லட்சங்களை இழந்து அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதுவையின் வில்லியனூர் அடுத்த கோர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார் (36). இவர் அப்பகுதியில் செல்போன் ரீசார்ஜ் செய்யும் விநியோகஸ்தர் தொழிலைச் செய்து வந்திருக்கிறார். மேலும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுகள் இவருக்கு பழக்கமாக ஆரம்பித்து இருக்கிறது. ஆரம்பத்தில் பொழுது போக்குவதற்காக விளையாட ஆரம்பித்த இவர் அதில் கொஞ்சம் பணத்தையும் வென்றிருக்கிறார். இதனால் அந்த விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடி ஒருகட்டத்தில் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகவே மாறியிருக்கிறார். அதனால் பல லட்சக் கணக்கான பணத்தை சூதாட்ட விளையாட்டில் இழந்து இருக்கிறார்.

பின்பு பணம் இல்லாத காரணத்தால் மனைவியின் நகையை அடமானம் வைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தொடர்ந்து இருக்கிறார். அடுத்து தொழிலுக்காக வைத்திருந்த பணம், நண்பர்களிடம் வாங்கின கடன் என அனைத்தையும் இந்த சூதாட்ட விளையாட்டில் இழந்திருக்கிறார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் விஜயக்குமாரை திரும்ப செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து உள்ளனர். இதுதொடர்பாக விஜயக்குமாருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

அதுபோன்ற ஒரு வாக்குவாதத்தில் வீட்டை விட்டு கிளம்பிய விஜயக்குமார் அருகில் உள்ள ஒரு ஏரிக்கரையில் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் விஜயக்குமார் தனது மனைவிக்கு வாட்ச் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் தனது வாட்ச் அப்பில் அரசாங்கம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் சூதாட்ட விளையட்டுகளில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அதேபோன்ற நடவடிக்கை தமிழகத்திலும் தொடருமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

More News

பயிற்சி மையம் பக்கமே போகல… நீட் தேர்வில் வெற்றிபெற்ற மதுரை மாணவியின் புதிய அனுபவம்!!!

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக சில மாணவர்கள் மாதக்கணக்கான பயிற்சி மையத்தில் செலவழித்து வருகின்றனர்.

சினிமா இல்லை என்றால் செத்து விடுவோம்: பிரபல தமிழ் இயக்குனர்

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக சினிமா துறையே முடங்கி உள்ளது என்பதும் திரைப்பட படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்தாலும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதற்கு

சமூக வலைத்தளங்களில் திடீரென டிரெண்டான தளபதியின் 'சர்கார்'

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'சர்கார்'திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

'சூரரை போற்று' டிரைலர் ரன்னிங் டைம் குறித்த தகவல்!

சூர்யா நடித்த 'சூரரை போற்று'திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை பட தயாரிப்பு நிறுவனமும் ஓடிடி நிறுவனமும்

வேலையே இல்லையா அவருக்கு? சுரேஷூடன் மீண்டும் மோதும் ரியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாலியான போட்டியாளர் என முதலில் கருதப்பட்ட ரியோ, திடீரென தனது முகத் திரையைக் கிழித்து ஆவேசமாக மாறினார். முதலில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம்