3,000 கோடியை குப்பையில் வீசிய தாய்… சொல்ல முடியாமல் குமுறும் மகனின் சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருந்த ஒரு இளைஞரின் 3,000 கோடி வருமானத்தை அவரது அம்மாவே தொலைத்து இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? உண்மையில் அப்படி நடந்த ஒரு சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உலக வணிகமே கிரிப்டோ கரன்சியின் வளர்ச்சியைப் பார்த்து மிரண்டுபோய் இருக்கிறது. இப்படி இருக்கும் கிரிப்டோ கரன்சி பிரபலமடையாமல் சமயத்தில் அதாவது கடந்த 2010 இல் இளைஞர் ஒருவர் 10 ஆயிரம் ரூபாய்க்கு 6 ஆயிரம் கிரிப்டோ கரன்சிகளை சொந்தமாக வாங்கியிருக்கிறார். இதனால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞருக்கு இப்படி ஒரு நுட்பமான அறிவா? என்று அப்போதே சில பத்திரிக்கைகள் இவரைப் பற்றி செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
இதையடுத்து கல்லூரி படித்துக் கொண்டிருந்த அந்த இளைஞர், படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்று தற்போது சொந்த வாழ்க்கையை கவனிக்கத் துவங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது கிரிப்டோ கரன்சியின் வளர்ச்சியைப் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருவதைப் பார்த்த அவர், திடீரென தனது கிரிப்டோ கரன்சியைப் பற்றி நியாபகம் வந்து தனது கணக்குப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள லேப்டாப்பை தேடியிருக்கிறார்.
ஆனால் லேப்டாப்பை காணாமல் பதறிப்போன அந்த இளைஞர் தனது அம்மாவிடம் அதுபற்றி கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த அந்த இளைஞரின் அம்மா, அது உபயோகப்படுத்தப்படாமல் இருந்ததால் பழையது என நினைத்து குப்பையில் வீசிவிட்டதாகத் தெரிவித்து உள்ளார். இதனால் வாழ்க்கையே சூனியமாகிவிட்டதுபோல் உணர்ந்த அந்த இளைஞர் கடந்த சில வருடங்களாக தான் மனஉளைச்சலில் இருந்து வந்ததை தற்போது Reddit சோஷியல் மீடியா மூலம் தெரிவித்து உள்ளார்.
காரணம் அந்த இளைஞரின் 6 ஆயிரம் கிரிப்டோ கரன்சியின் ஒட்டுமொத்த மதிப்பு தற்போது 300 மில்லியன் பவுண்டு அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் இந்தத் தொகை 3 ஆயிரம் கோடியைத் தாண்டும். வெறும் 10 பவுண்டுக்கு 6 ஆயிரம் கிரிப்டோவை வாங்கத் தெரிந்த அந்த இளைஞர் அதைக் கவனமாக வைக்கத்தெரியாமல் தற்போது 3,000 கோடியை இழந்திருக்கும் இந்தச் சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout