ஆணுறுப்பை பூட்டால் லாக் செய்த நபர்… 3 மாதங்களாக அவஸ்தைப் பட்ட கோர சம்பவம்!
- IndiaGlitz, [Thursday,June 29 2023]
ஸ்பெயின் நாட்டில் வசித்துவந்த நபர் ஒருவர் அவ்வபோது தனது ஆணுறுப்பை பூட்டால் லாக் செய்துவிட்டு அதன் சாவியை தனது காதலியிடம் கொடுத்து விளையாடி வந்த நிலையில் அவர்களது காதல் திடீரென முறிந்துவிட்டதால் காதலி சாவியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இதனால் கடும் அவஸ்தைக்குள்ளான சம்பவம் தற்போது இணயைத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா பகுதியில் வசித்துவந்த நபர் ஒருவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லாக் செய்யும் அமைப்பிலான பூட்டை வாங்கியுள்ளார். அந்தப் பூட்டைக் கொண்டு அவ்வபோது தனது ஆணுறுப்பை லாக் செய்துவிட்டு சாவியை காதலியிடம் கொடுத்து விளையாடி வந்துள்ளார். இதுபோன்ற சம்பங்கள் பலமுறை நடந்த நிலையில் திடீரென அவரது காதலி அவரை விட்டு பிரிந்திருக்கிறார். இதனால் ஆணுறுப்பில் பூட்டப்பட்ட பூட்டை திறக்க முடியாமல் அந்த நபர் 3 மாதங்களாக கடும் அவஸ்தைப்பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
பின்பு ஒருவழியாக அவரது காதலியைக் கண்டுபிடித்து பூட்டிற்கான சாவியை வாங்கியுள்ளார். ஆனால் 3 மாதங்களான நிலையில் அந்தப் பூட்டு கடுமையாக துருப்பிடித்திருக்கிறது. இதனால் அந்தப் பூட்டை திறக்க முடியாமல் மீண்டும் அவஸ்தைக்குள்ளான நிலையில் கேட்டலார் பகுதியில் உள்ள டாட்டூ கலைஞர்களை இவர் அணுகியிருக்கிறார்.
இதையடுத்து டாட்டூ கலைஞரும் அவரது உதவியாளர் அலெக்ஸ்க்கும் சாவியை வைத்து பூட்டை திறக்க முயற்சித்து உள்ளனர். ஆனால் துருப்பிடித்து இருந்த காரணத்தால் அவர்களாலும் அந்தப் பூட்டை திறக்க முடியாமல் போய் இருக்கிறது. காரணம் அவர் பூட்டை மாட்டிக்கொண்டே அடிக்கடி குளித்ததால் பூட்டு தண்ணீரில் ஊறி இந்த நிலைமைக்கு மாறியதாகக் கூறியுள்ளனர்.
பின்னர் அந்த டாட்டூ கலைஞர்கள் சாவியை பூட்டில் வைத்து சுத்தியால் அடித்து கஷ்டப்பட்டு திறந்துள்ளனர். இந்தச் சம்பவங்களை La Tuerta piercer பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
மேலும் இந்த விசித்திர சம்பவம் குறித்துபேசிய உதவியாளர் அலெக்ஸ் இதுபோன்ற நிகழ்வுகள் இங்கு அடிக்கடி நடைபெறுகிறது. இதெல்லாம் செக்ஸ் விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளிதிருப்பது நெட்டிசன்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.