5 சிறுநீரகங்களுடன் வாழும் அதிசிய மனிதர்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கதேசத்தை சேர்ந்தவர் தான் 41 வயதுடைய தீபன் என்ற தொழிலதிபர். இவர் சிறியவராக இருக்கும்போதே சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தினால், கடந்த 1994-ல் உறவினர் ஒருவரின் சிறுநீரகம் இவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. சில வருடங்கள் கழித்து அந்த சிறுநீரகமும் செயலிழக்க தொடங்கிய காரணத்தால், வேறு ஒரு உறவினர் கொடுத்த சிறுநீரகம் அவருக்கு பொருத்தப்பட்டது.
இந்நிலையில் 2-ஆவது சிறுநீரகமும் செயலிழக்க துவங்கியதால், சென்னையில் உள்ள முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இங்கு ரத்தநாளம் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணா் மருத்துவா் சரவணன் தலைமையிலான மருத்துவக்குழு, இவருக்கு தானமாக பெற்ற 3-ஆவது சிறுநீரகத்தை வெற்றிகரமாக பொருத்தினர்.
இதுகுறித்து மருத்துவர் சரவணன் கூறியிருப்பதாவது, "வயிற்றில் உள்ள குடலுக்கு பின்னால் தான் சிறுநீரகத்தை பொறுத்த முடியும். மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட சிறுநீரகம் செயலிழந்தால், மற்றொரு சிறுநீரகத்தை இப்படி பொருத்தலாம். தற்போது ஆரோக்கியமாக இருக்கும் தீபன் வயிற்றில், 2 சிறுநீரகங்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்ட 3 சிறுநீரகங்கள் என, மொத்தமாக 5 சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout