சானிடைசர் தடவிய கையில் சிகரெட்… உடல் முழுவதும் தீப்பற்றிய பரிதாபம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் சானிடைசர் போன்ற கிருமிநாசினி பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. மேலும் இதுபோன்ற சானிடைசர் பொருட்களைப் பயன்படுத்தும்போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்துத் தொடர்ந்து மருத்துவர்கள் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனாலும் சானிடைசர் தடவிய கையால் அடுப்பைப் பற்ற வைத்து சிலரின் கைகள் பொசுங்கிய நிகழ்வுகளும் அரங்கேறின.
அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது சென்னையில் நடைபெற்று இருக்கிறது. சென்னை அசோக் நகர் பகுதியில் கார்பெண்டர் தொழில் செய்துவரும் ரூபன் (50) நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு வந்தவுடன் கைகளை சானிடைசர் போட்டு சுத்தம் செய்துள்ளார். அப்போது சிறிதளவு சானிடைசர் அவரது சட்டையிலும் கொட்டி இருக்கிறது. இதைப் பொருட்படுத்தாத ரூபன் கழிவறைக்குச் சென்று சிகரெட்டை பற்ற வைத்துள்ளார்.
சிகரெட்டை பற்ற வைத்தவுடன் அவரது சட்டை மற்றும் கைகளில் நெருப்பு பற்றி தீ மளமளவென உடல் முழுவதும் பரவ ஆரம்பித்து இருக்கிறது. இதனால் பதறிப்போன ரூபன் உதவிக்காக கதறியிருக்கிறார். உடனே வீட்டில் இருந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு அவரை மீட்டுள்ளனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்துவிட்டதால் தற்போது ரூபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments