லிவ்-இன் உறவு காதலியைக் கொன்று, குக்கரில் வேக வைத்த கொடூரக் காதலன்… அதிர்ச்சி சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்- இன் உறவுமுறைகளில் வாழும் சில காதல் உறவுகள் தொடர்பான கொலைகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்றன. டெல்லி, ஹைத்ராபாத்தை தொடர்ந்து தற்போது மும்பையில் ஒரு கொலை அரங்கேறி இருப்பதுடன் இன்னும் ஒருபடி மேலே சென்று காதலியை குக்கரில் வைத்து வேக வைத்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையிலுள்ள மீராசாலை பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் சஹானி. 56 வயதான இவர் போலிவாலி பகுதியில் கடை ஒன்றை வைத்து நடத்திவந்த நிலையில் சரஸ்வதி வைத்யா எனும் 36 வயது பெண்ணுடன் லிவ்-இன் உறவு முறையில் வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவியைப் போன்று கடந்த 3 வருடங்களாக வாழ்ந்துவந்த இவர்களுக்குள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கடும் கோபமடைந்த மனோஜ் தனது காதலி சரஸ்வதியை கொடூரமாகக் கொன்றுள்ளார். இதைத் தொடர்ந்து உடலை அப்புறப்படுத்துவதற்காக மரம் அறுக்கும் இயந்திரத்தை வாங்கி வந்து தனது வீட்டில் வைத்தே சரஸ்வதியின் உடலை அறுத்துள்ளார். மேலும் அந்த உடல் பாகங்களை அப்புறப்படுத்துவற்கு வசதியாக குக்கரில் வைத்து வேகவைத்துள்ளார். ஆனால் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் சரவஸ்தி வெளியே வராததாலும் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மனோஜ் வீட்டில் கொலை நடந்திருப்பதற்காக தடயத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் குக்கரில் வைத்து உடல்பாகங்களை வேக வைத்தற்கான அடையாளத்தையும் கண்டுபிடித்த நிலையில் தற்போது மனோஜ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு துணையாக இருந்த மற்றொரு நபரும் இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்திய தனது காதலி ஷரத்தா வாக்கரை காதலன் அர்னாப் புனாவாலா கொலை செய்து 36 துண்டுகளாக வெட்டி தனது வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தார். அதேபோல மே மாதத்தில் ஹைதராபாத் பகுதியில் ஒன்றாக வசித்துவந்த யர்ரம் அனுராதா ரெட்டி என்பவரை சந்திரமோகன் என்பவர் 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்து தனது வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்துள்ளார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது லிவ்-இன் முறையில் தன்னுடன் வாழ்ந்த காதலியைக் கொன்று அவரது உடல்பாகங்களையே குக்கரில் வைத்து சமைத்த மனோஜ் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
#WATCH | Maharashtra | 32-year-old woman killed by 56-year-old live-in partner | As per Police, the accused Manoj Sahni killed Saraswati Vaidya 3-4 days back and after that, he purchased a tree-cutter to chop her into pieces. Police say that the accused boiled pieces of her body… pic.twitter.com/ilFUfWVOLY
— ANI (@ANI) June 8, 2023
Maharashtra | Police have found a body of a woman who had been cut into pieces, from a society in Mira Road area. Here a couple was living in a live-in relationship. Preliminary investigation revealed that the woman was hacked to death. Further Investigation underway: Jayant… pic.twitter.com/uZDaSTKDFd
— ANI (@ANI) June 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments