கல்லூரி மாணவி கண்முன்னே வெட்டி கொலை செய்யப்பட்ட தந்தை: சென்னையில் பயங்கரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கந்தன் என்பவர் கேபிள் டிவி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில்ரீதியாக எதிரிகள் இருப்பார்கள் என தெரிகிறது
இந்த நிலையில் இன்று காலை கந்தன் தனது மகள் கீர்த்தனாவை கல்லூரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் போட்டிருந்த இரண்டு மர்ம நபர்கள் கந்தனின் மோட்டார் சைக்கிளின் மீது மோதினர். இதனாலும் கந்தனும் அவரது மகளும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
அந்த நேரத்தில் ஹெல்மெட் போட்டிருந்த மர்ம நபர்கள் கந்தனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த மகள் கீர்த்தனாவுக்கு கையில் வெட்டு விழுந்தது. பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் கொலையாளிகள் இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் அவர்களை பொதுமக்கள் அடையாளம் காணமுடியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com