காலை டிபன் செய்வதில் தகராறு.. மனைவி, தாய், மகள்கள் என 5 பேர்களை கொலை செய்த சைக்கோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
காலை உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாயார், மனைவி மற்றும் 3 மகள்களை கொலை செய்த சைக்கோ ஒருவருடைய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டேராடூன் என்ற பகுதியைச் சேர்ந்த 47 வயது மகேஷ் திவாரி என்பவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருடைய சகோதரர் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை வைத்துதான் அவருடைய குடும்பம் நடந்தது என கூறப்படுகிறது.
மகேஷ் திவாரி 75 வயது தாயார், 35 வயது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில் மகேஷ், வேலை இல்லாமல் இருந்ததால் அவரது மனைவி அவரை வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வரும்படி கூறியதாகவும் இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஷ் தன்னுடைய மனைவியிடம் காலை டிபன் செய்ய கூறியபோது கேஸ் இல்லை என்று அவரது மனைவி பதில் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் வேறு சிலிண்டரை மாற்ற முயன்ற போது அதுவும் காலியான சிலிண்டர் என்று அவர் மனைவி கூறியதால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மகேஷ், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். அதன்பின் தனது தாய் மற்றும் மூன்று மகள்களையும் அடுத்தடுத்து கொலை செய்தார். மகேஷ் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் பக்கத்து வீட்டுக்காரர் ஜன்னல் வழியாக இந்த கொடூர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போது மகேஷ் வீட்டை பூட்டிக் கொண்டார். இருப்பினும் வீட்டின் கதவை உடைத்து மகேஷ் திவாரியை கைது செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட ஐவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மகேஷ் நீண்ட மத நம்பிக்கை உடையவர் என்றும் மணிக்கணக்கில் பூஜை செய்து வந்ததாகவும், சற்று மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments