5 வயது சிறுமிகளுடன் பாலியல் உறவு: 600 வருடங்கள் சிறைத்தண்டனை 

5 வயது சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்ட 32 வயது நபருக்கு 600 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்முறைக்கு குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும், குற்றங்கள் மட்டும் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அலபாமா என்ற பகுதியை சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் 5 வயது சிறுமிகள் இருவருடன் பாலியல் வன்முறை கொண்டதாகவும் அதனை அவர் வீடியோ பதிவு செய்ததாகவும் தெரிகிறது.

இது குறித்து ஆதாரங்களுடன் கண்டுபிடித்த அமெரிக்க போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் இருந்து 102 ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு சமீபத்தில் முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 32 வயது நபர் குற்றவாளி என்பது முடிவு செய்து அவருக்கு 600 வருடங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

லுங்கியை மடித்துகட்டி சிஎஸ்கேவுக்கு ஆதரவு கொடுத்த நடிகை! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் தொடர் போட்டிகளில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் தோனியின் ரசிகர்களும் சரி, திரை நட்சத்திரங்களும் சரி தொடர்ச்சியாக சிஎஸ்கே கொடுத்து வரும் ஆதரவை

இனி மத்தது எல்லாம் ஓரமாதா நிக்கனும்… கெத்துக் காட்டும் பிரதமர் மோடியின் சிறப்பு விமானம்!!!

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆகியோர்

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவன ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!!!

கொரோனா தாக்கத்தால் நேரில் சென்று ஷாப்பிங் செய்வோரை விட ஆன்லைனில் ஆர்டர்

சவாலில் சூர்யாவை முந்திய த்ரிஷா: வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது மகனுடன் இணைந்து தனது தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டார்

ஊரடங்கால் வருமானமில்லை: சமையல் வேலை செய்யும் தமிழ் நடிகை!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வேலையிழந்து வருமானம் இழந்தனர் என்பது குறித்த செய்திகள் வெளியாகி வருகிறது