5 வயது சிறுமிகளுடன் பாலியல் உறவு: 600 வருடங்கள் சிறைத்தண்டனை 

5 வயது சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்ட 32 வயது நபருக்கு 600 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்முறைக்கு குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும், குற்றங்கள் மட்டும் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அலபாமா என்ற பகுதியை சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் 5 வயது சிறுமிகள் இருவருடன் பாலியல் வன்முறை கொண்டதாகவும் அதனை அவர் வீடியோ பதிவு செய்ததாகவும் தெரிகிறது.

இது குறித்து ஆதாரங்களுடன் கண்டுபிடித்த அமெரிக்க போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் இருந்து 102 ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு சமீபத்தில் முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 32 வயது நபர் குற்றவாளி என்பது முடிவு செய்து அவருக்கு 600 வருடங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.