மூக்கு வழியே பாம்பை விட்டு… வாய்வழியே எடுக்கும் வித்தைக்காரன்… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

“பாம்பு என்றால் படையும் நடுங்கும்“ எனப் பொதுவாக ஒரு பழமொழி சொல்லப்படுகிறது. இந்நிலையில் மூக்கு வழியே பாம்பை விட்டு வாய்வழியே அதை மிகத் திறமையாக எடுக்கும் முதியவர் ஒருவரின் வீடியோ கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

பாம்பைப் பார்த்து அஞ்சுவதற்குப் பதிலாக முதியவர் ஒருவர் குட்டிப் பாம்பை தனது கைகளால் எடுத்து அதை தனது மூக்குக்குள் விடுகிறார். மூக்கு ஓட்டை வழியாகச் செல்லும் அந்தப் பாம்பு பின்னர் வாய்வழியாக வெளியே வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கூடவே இது விலங்குகள் மீதான அச்சுறுத்தலுக்கு சமம் என அந்த பெரியவரை திட்டியும் வருகின்றனர்.

இந்த வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் வித்யூத் ஜம்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் மேலும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று இருக்கிறது. வெளிநாடுகளில் பாம்பை வைத்து வித்தைக்காட்டும் சிலர் இதுபோன்று விபரீதத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இந்தியாவில் முதல் முறையாக இதுபோன்ற வித்தை, அதுவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.