நான் கொரோனாவை விட மோசமானவன்: போலீசிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் ’கொரோனாவை என் கண் முன் காட்டு, முதலமைச்சரை என் முன்னால் வந்து நின்று நிற்கச்சொல்’ என வீராவேசம் பேசி அதன் பின் போலீசாரால் சிறப்பாக ‘கவனிக்க’ப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை போலீசார் மறித்து, ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு அந்த இளைஞரோ, ‘நான் கொரோனாவை விட பயங்கரமானவன், எனக்கு உத்தரவு போட நீங்கள் யார்'? என்றும் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறியது, போலீசாரை மிரட்டியது உள்பட 5 பிரிவுகளில் போலீசார் அவர் மீதுவழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நேற்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையையும் மீறி ஊரடங்கு உத்தரவை இளைஞர்கள் சிலர் மீறி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments