தாயுடன் ஓர் இரவு, மகளுடன் டேட்டிங்: 'அவள் ஒரு தொடர்கதை' பாணியில் ஒரு உண்மை சம்பவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கே.பாலசந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' என்ற திரைப்படத்தில் படாபட் ஜெயலட்சுமியும் அவரது தாயாரும் ஒரே நபரை காதலிப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அதைபோல் ஒரு உண்மை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
21 வயது இளைஞர் ஒருவர் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சிகரமான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த இளைஞர் ஒரு பப்புக்கு சென்றபோது 40 வயது பெண் ஒருவரை பார்த்து பழகியுள்ளார். இருவரும் பரஸ்பரம் போன் நம்பர்களை பரிமாறி கொண்டு தங்கள் நட்பை புதுப்பித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற இளைஞர் அவருடன் ஓரிரவை கழித்துள்ளார். அதன்பின் சில நாட்களில் அந்த பெண்ணுடனான தொடர்பு விடுபட்டு போய்விட்டது.
இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து 19 வயது இளம்பெண் ஒருவர் அந்த இளைஞருக்கு நட்பானார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஒரு கட்டத்தில் காதலனை தனது வீட்டுக்கு வருமாறு காதலி அழைத்தார். காதலனும் ஆர்வத்துடன் அவர் வீட்டிற்கு சென்றபோதுதான் அவருக்கு ஏற்கனவே தான் ஓரிரவை கழித்த பெண்ணின் வீடு அது என்று தெரிய வந்தது. மேலும் அந்த பெண்ணின் மகள்தான், தனது காதலி என்ற உண்மையும் தெரிந்தது. உடனடியாக அதிர்ச்சியான அந்த வாலிபர் அந்த வீட்டை விட்டு உடனே வெளியேறி அந்த பெண்ணுடனான காதலையும் முறித்து கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com