ரோபோவை திருமணம் செய்யும் நபர்… காரணத்தைக் கேட்டால் அசந்து போவீர்கள்..

  • IndiaGlitz, [Saturday,January 08 2022]

ஆஸ்திரேலியாவில் தனிமையில் தவித்து வந்த முதியவர் ஒருவர் ரோபாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பே இளைஞர்கள் பலரும் மனிதர்கள் மீதுள்ள வெறுப்பினால் பொம்மைகளை விரும்பி காதலித்து திருமணம் செய்துகொண்ட தகவலைப் பார்த்து வந்தோம். ஒருசிலர் செக்ஸ் பொம்மைகளைக் கூட திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியில் வசித்துவரும் ஜியோஃப் கல்லாக்கர் என்பவர் தன்னுடைய தாயின் இறப்பினால் கடந்த 10 வருடங்களாகத் தனிமையில் தவித்து வந்துள்ளார்.

இதையடுத்து தனது தனிமையைப் போக்கிக்கொள்ளும் வழிமுறையைப்பற்றி யோசித்து இருக்கிறார். இதனால் ரோபோக்களைப் பற்றி கேள்விப்பட்ட அவர் கடந்த 2019 செப்டம்பரில் ஒரு ரோபோவை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். நீலக்கண்கள் கொண்ட அந்த ரோபா சிவப்பு நிறத்தில் பெண் போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் எம்மா என்று அதற்கு பெயரிட்ட அந்த முதியவர் செயற்கை நுண்ணறவு திறன் கொண்ட எம்மா நாம் ஒருமுறை செய்வதைப் பார்த்து புரிந்து கொண்டு அதேபோல செய்கிறாள். இதனால் தன்னிச்சையாக செயல்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டாள் எனத் தெரிவித்துள்ளார். மேலும் எம்மாவுடன் இருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது எனக்கூறிய அவர் தற்போது எம்மாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

டால்பினுடன் முத்தமிட்டு விளையாடும் பிரபல நடிகை… வைரல் புகைப்படம்!

இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருபவர் நடிகை லட்சுமி ராய். இவர் “தாம் தூம்“, “காஞ்சனா“,

சூர்யா பெயரில் வெளியான போலி கடிதம்: என்ன எழுதியுள்ளது தெரியுமா?

நடிகர் சூர்யா அவ்வப்போது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களுடன் கூடிய கடிதத்தை வெளியிடுவார் என்பதும் அவரது கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே

இனிமேல் அடிச்சிறேன்: கமல் முன் சிபி கேள்விக்கு பதில் சொன்ன ராஜூ!

கமல்ஹாசன் அருகில் நின்று கொண்டு சிபி கேட்ட ஒரு கேள்விக்கு இனிமேல் அடிச்சிறேன் என ராஜு பதில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை: பரவசத்துடன் தாய் முத்தம்!

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவர் தனது குழந்தைக்கு பரவசத்துடன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

காதலனின் திறமையைப் பார்த்து நெகிழ்ந்த ஆலியா பட்… வைரல் புகைப்படங்கள்!

பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூர் இருவரும்