கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை… பதற வைக்கும் காரணம்!!!
- IndiaGlitz, [Wednesday,October 07 2020]
நேற்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்ட போலீசார் வாயில் இருந்து நுரை வழிவதைப் பார்த்து உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து இருக்கிறார். மருத்துவர்கள் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதை உறுதிப் படுத்தினர்.
அப்போது உயிரிழந்தவர்களின் உடையில் இருந்து ஒரு பையை போலீசார் மீட்டுள்ளனர். அதில் ஒரு மனு இருந்திருக்கிறது. அந்த மனுவில் தேனி மாவட்டம் தேவதானம்பட்டி அடுத்த காமக்காபட்டியைச் சேர்ந்த விவசாயி அர்ச்சுணன் (62). இவர் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் இருந்து ரூ.15 லட்சத்தை கடனைப் பெற்று ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார். பல்வேறு தவணைகளின் மூலம் இதுவரை 61/2 லட்சத்தையும் அவர் அந்நிறுவனத்திற்கு திருப்பி செலுதி இருக்கிறார்.
ஆனால் சரியான வருமான இல்லாத காரணத்தால் கடந்த பல மாதங்களாக தவணையை செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கிறார். இதனால் அந்த தனியார் நிதிநிறுவனம் அர்ச்சுணன் மீது வழக்கு தொடுத்ததோடு வீட்டையும் ஜப்தி செய்ய முன்வந்திருக்கிறது. தன்னுடைய வீடு ஜப்தி ஆவதை தடுக்க முடியாத அர்ச்சுணன் இந்த விவகாரம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருக்கிறார்.
அப்போது மனமுடைந்த அர்ச்சுணன் விஷம் அருந்தி கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே மயங்கி விழுந்து இருக்கிறார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு நிகழ்ந்த இருக்கிறது. இந்தத் தகவல் திண்டுக்கல் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.