விமானத்தில் இருந்து விழுந்தும் நொறுங்காத மொபைல்… எது தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
2 அடி தூரத்தில் இருந்து விழுந்தாலே போதும் நமது செல்ல மொபைல் போன்கள் பலத்த அடி வாங்கும். அப்படி இருக்கும்போது 2,000 ஆயிரம் அடி உயரத்தில் அதுவும் விமானத்தில் இருந்து வேகமாக விழுந்த ஒரு ஐபோன் தப்பி பிழைத்து இருக்கிறது. மேலும் சேதம் எதுவும் ஏற்படாமல் அப்படியே இருப்பதுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரேசில் நாட்டை சேர்ந்த ஆவணப்படத் தயாரிப்பாளர் எர்னஸ்டோ கலியோட்டோ, விமானம் மூலம் ரியோ டிஜெனிரோ நகரத்தின் கபோ ஃப்ரியோ கடற்கரைக்கு மேலே சுமார் 2,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது ஜன்னலுக்கு வெளியே கையை நீட்டி புகைப்படம் எடுக்கத் தொடங்கி இருக்கிறார். அப்போது காற்று வேகத்தின் காரணமாக அவரது கையில் இருந்த ஐபோன்6 தவறி கீழே விழுந்து விட்டது. இந்நிலையில் எப்படியும் தனது மொபைலை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் பைனாகுலரை வைத்துக்கொண்டு தாழ்வாக பறந்தபடியே தேடி இருக்கிறார்.
எப்படியோ ஒரு வழியாக தனது ஐபோனை கண்டும் பிடித்து இருக்கிறார். ஆனால் எதற்கு உதவாத நிலையில் இருக்கும் என நினைத்த அவருக்கு பெரிய ஷாக்கே ஏற்பட்டு இருக்கிறது. அதாவது 2,000 அடி உயரத்தில் இருந்து படு வேகமாக விழுந்த ஐபோன்6 எந்த சேதாரமும் இல்லாமம் தப்பி பிழைத்து இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த அவர் தனது ஐபோன் அனுபவத்தைப் பற்றி ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ கடும் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout