12ஆவது மாடியில் தொங்கி வொர்க் அவுட் செய்த பலே அறிவாளி… பதற வைக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னுடைய சொந்த மகனை 10 ஆவது மாடியில் தொங்கவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது மீண்டும் பரிதாபாத் குறித்த மற்றொரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரியாணா மாநிலம் பரிதாபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த பெண் ஒருவர் 9 ஆவது மாடி பால்கனியில் விழுந்த தன்னுடைய சேலையை எடுப்பதற்காக பெட்ஷீட்டில் சொந்த மகனை கட்டித் தொங்கவிட்டார். அந்தச் சிறுவனும் அம்மாவின் சேலையை எடுத்துக்கொண்டு தொங்கிய காட்சி சோஷியல் மீடியாவில் சர்ச்சையானது.
இந்நிலையில் அதே பரிதாபாத் பகுதியில் செக்டார் 82 கிராண்டேயூரா பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவர் தன்னுடைய வீட்டு பால்கனி கம்பிக்கு வெளியே இருந்தவாறு கம்பியைப் பிடித்து தொங்கி வொர்க் அவுட் செய்கிறார். 12 மாடியில் இவர் செய்யும் இந்த விஷயத்தை எதிர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது மேலும் வைரலாகி பரிதாபாத் மக்களுக்கு என்னதான் ஆயிற்று எந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
డేర్డెవిల్ వర్కవుట్ : 12వ అంతస్తులోని బాల్కనీ నుండి వేలాడుతూ వ్యాయామం #Faridabad #viralvideo #video #Viralvdoz #Daredevilworkout #Workout #Daredevil #NCR pic.twitter.com/WtgHj0xjPl
— Asianetnews Telugu (@AsianetNewsTL) February 15, 2022
Cannot believe this...
— HasnaZarooriHai (@HasnaZaruriHai) February 14, 2022
Apparently boy was sent from a 10th floor balcony to a floor below to pick clothes. And like this ?? #Faridabad pic.twitter.com/7DOylmxSFV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com