பிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற நபர் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்மாவின் மூலம் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தால் குணம் அடையலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பிளாஸ்ஸ்மா சிகிச்சையை மேற்கொண்ட நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை 53 வயது நபர் ஒருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை அளித்த ஒரு சில நாட்களில் அவர் படிப்படியாக குணமடைந்து வந்தார். அவருடைய உடலில் பிளாஸ்மாவில் இருக்கும் ஆன்டிபாடிகள் நன்றாகவே வேலை செய்ததாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
ஆனால் திடீரென கடந்த திங்கட்கிழமை அவரது உடல் நிலை மோசமானது. நாளுக்கு நாள் நலிவ்டைந்து கொண்டே வந்த அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. பிளாஸ்மா சிகிச்சை காரணமாகத்தான் அவருடைய ரத்தத்தில் இன்பெக்சன் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் அவருடைய உடல்நிலை மோசமானதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அவர் பலியானார்
அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் சுவாசக் கோளாறு மற்றும் செப்டிசீமியா காரணமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா தொற்று நோய் குணமாகும் என்று நம்பப்பட்ட நிலையில் தற்போது பிளாஸ்மா சிகிச்சையால் ஒருவர் பலியாகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே கொரோனாவுக்கு எதிராக பிளாஸ்மா தெரபி பலனளிக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பிளாஸ்மாதெரபியை முறையாக பயன்படுத்தாவிட்டால் அது உயிருக்கே ஆபத்து என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. பிளாஸ்மா என்பது ஒருவரின் ரத்தத்தில் இருந்து இன்னொருவரின் ரத்த செல்களுக்குள் ஆன்டிபாடிகளை கடத்துவது ஆகும். இவ்வாறு கடத்துவதன் மூலம் கொரோனா தொற்று தாக்கியவர்கள் குணமடைய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout