மனிதனின் காதிற்குள் சிலந்தி வலை: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,May 11 2019]

சீனாவை சேர்ந்த ஒருவரின் காதிற்குள் சிறிய வகை சிலந்தி ஒன்று வலை கட்டியுள்ளது மைக்ரோஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த லீ என்பவர் தனது காதிற்குள் ஏதோ குடைவது போன்று இருப்பதாக மருத்துவரிடம் சோதனை செய்ய சென்றுள்ளார். அவரது காதை முதலில் பரிசோதனை செய்த மருத்துவருக்கு தவறாக எதுவும் தெரியவில்லை. ஆனால் மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தபோது அவரது காதிற்குள் சிலந்தி ஒன்று வலை கட்டி ஹாயாக வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

அந்த சிறிய வகை சிலந்தியை வெளியே கொண்டு வர காதிற்குள் ஒருசில துளிகள் சலைனை மருத்துவர் ஊற்றியவுடன் அந்த சிலந்தி வெளியே வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து இதேபோன்ற பிரச்சனை வேறு யாருக்காவது ஏற்பட்டால் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுக வேண்டும் என்று லீ அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.