ஊரடங்கால் மனைவியை பிரிந்த கணவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை
- IndiaGlitz, [Friday,April 10 2020]
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் ஒருசில உயிர்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு நடந்தே சென்றவர்கள் உயிரிழந்தது, மதுக்கடைகள் மூடப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டவர்கள் போன்ற தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கோண்டா போன்ற பகுதியை சேர்ந்த 32 வயது ராகேஷ் என்பவரின் மனைவி ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் தனது தாயார் வீட்டுக்கு சென்றார். திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் அவரால் தனது கணவரின் வீட்டிற்கு திரும்ப வர முடியவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய மனைவியை 2 வாரத்துக்கு மேலாக சந்திக்காமல் இருந்த ராகேஷ் கடந்த சில நாட்களாக மனமுடைந்து மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் பிரிவைத் தாங்காமல் ராகேஷ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ஊரடங்கு உத்தரவு காரணமாக இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.